×

மூவாநல்லூர் அரசுப்பண்ணையில் புளி, கறிவேப்பிலை செடிகள் மானிய விலையில் விற்பனை-தோட்டக்கலை துணை இயக்குனர் தகவல்

மன்னார்குடி : திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மூவாநல்லூர் கிராமத்தில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணையில் புளி மற்றும் கறிவேப்பிலை செடிகள் உற் பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகம் துவ ங்கி உள்ளதாக தோட்டக்கலை துணை இயக்குனர் (பொ) இளவரசன் தெரிவித் துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், திருவாரூர் மாவட்டத்தில்ஒருங் கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம் 2021-22 திட்டத்தின்படி 3 ஹெக்டர் கறி வேப்பிலை செடிகள், 10 ஹெக்டர் அளவிற்கு புளியங்கன்று களும் விநியோகி க்கும் விதமாக மூவாநல்லூர் அரசு தோட்டக்கலை பண்ணையில் உற்பத்தி செய்யப் பட்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகம் செய்யப் பட்டு வருகிறது.

புளியங்கன்றுகள் ஒரு ஹெக்டருக்கு 156 எண்களும், கறிவேப்பிலை செடிகள் ஒரு ஹெக்டருக்கு 2 ஆயிரம் எண்களும் விநியோகம் செய்யப்படுகிறது. ஒரு விவசாயி 2 ஹெக்டர் வரை பயனடையலாம். இந்த மானியத்தை பெறுவதற்கு அசல் அடங்கல், சிட்டா, ஆதார் நகல் மற்றும் புகைப்படம் வழங்கவேண்டும்.தற்போது செடிகள் தயார் நிலையில் உள்ளதால் அனைத்து வட்டார விவசாயிகளும் புளியங்கன்றுகள் மற்றும் கறிவேப்பிலை செடிகள் மானியத்தில் தேவைப்படுவோர் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலு வல கங்களை தொடர்பு கொண்டு செடிகளை மூவாநல்லூர் அரசு தோட்டக் கலை பண்ணை யில் பெற்று கொள்ள லாம். இவ்வாறு தோட்டக்கலை துணை இயக்குனர் (பொ) இளவரசன் தெரிவித்துள்ளார்.

Tags : Muvanallur Government Farm ,Deputy Director of , Mannargudi: Tamarind and tamarind at a government horticulture farm in Muvanallur village near Mannargudi in Thiruvarur district.
× RELATED சுகாதார பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம்