×

திண்டுக்கலில் ரூ.76 கோடியில் ஐடிசி நிறுவனம் உருவாக்கிய சூரியசக்தி மின்நிலையம்: புதுப்பிக்கத்தக்க மின்சார திட்டங்களுக்கு முக்கியத்துவம்

திண்டுக்கல்: ஐ.டி.சி. நிறுவனம் திண்டுக்கல்லில் 14.9 மெகாவாட்ஸ் திறன் கொண்ட சூரியசக்தி மின்நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது. 59 ஏக்கர் பரப்பளவில் சுமார் 76 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மின்நிலையம் மூலமாக ஆண்டுதோறும் சுமார் 22 மில்லியன் யூனிட் மின்சாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மின்சாரம் ஐ.டி.சி. நிறுவனத்தின் ஹோட்டல்கள், உணவு தயாரிக்கும் தொழிற்சாலைகள், காகித தயாரிப்பு தொழிற்சாலை உள்ளிட்டவற்றின் தேவைகளை பூர்த்தி செய்யும் என தெரிகிறது.

இந்த சூரியசக்தி மின்நிலையம் மூலம் கரியமில வாயுவால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் தவிர்க்கப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐ.டி.சி. நிறுவனம் 138 மெகாவாட்ஸ் மின்சாரத்தை காற்றாலை மூலமும், 14.9 மெகாவாட்ஸ் மின்சாரத்தை சூரியசக்தி மூலமும் உற்பத்தி செய்கிறது. சூரியசக்தி மூலம் மேலும் 53 மெகாவாட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான திட்டப்பணிகள் நடந்து வருவதாகவும் ஐ.டி.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது. கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐ.டி.சி. நிறுவனம் புதுப்பிக்கத்தக்க மின்சாரம் உற்பத்திக்காக 1000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.         


Tags : ITC ,Dindigul , Dindigul, Rs 76 crore, ITC, solar power plant, renewable electricity
× RELATED திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு...