உத்திரப்பிரதேசத்தை கொரோனா பாதித்த மாநிலமாக அறிவித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு அரசாணை..!!

லக்னோ: உத்திரப்பிரதேசத்தை கொரோனா பாதித்த மாநிலமாக அறிவித்து அம்மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் ஒமிக்ரான் எனும் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் அதிகமான பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் 781  பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே,உள்ளூர் அளவில் கட்டுப்பாடுகள் விதிக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒன்றிய அரசு அறிவுறுத்தல் வழங்கியது. கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த உ.பி. அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில், உத்திரப்பிரதேசத்தை கொரோனா பாதித்த மாநிலமாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.

யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு ஆட்சி நடைபெற்று வரும் உத்திரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனிடையே, மாநில அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், உத்திரப்பிரதேசம் கொரோனா பாதித்த மாநிலம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மார்ச் 31ம் தேதி அல்லது மறு அறிவிப்பு வரும் வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான உத்திரபிரதேசத்தில் நாள்தோறும் 50க்கும் குறைவான பெருக்கே கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது.

அவ்வாறு இருப்பின், உத்திரப்பிரதேசத்தை கொரோனா பாதித்த மாநிலம் என்று யோகி ஆதித்யநாத் அரசு அறிவித்திருப்பது வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உத்தரபிரதேசத்தில் டிச.25 முதல் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. ஒமிக்ரான் தொற்று பரவலை தடுக்கும் வகையில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரையில் இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பிற மாநிலங்களில் அல்லது வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: