தேசிய பேரிடர் மீட்புப்படையினர் வேலூரில் முகாம் பேரிடர் கால கட்டிட இடிபாடுகளில் சிக்கியவரை மீட்பது எப்படி? தத்ரூபமாக விளக்கம் அளித்தனர்

வேலூர் : கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பது தொடர்பான செயல்விளக்கத்தை பொதுமக்கள் மத்தியில் வேலூர் கோட்டையில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் நேற்று செய்து காட்டினர்.தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் தற்போது நிலஅதிர்வு, வெள்ளம், காட்டுத்தீ என இயற்கை பேரிடர்கள் அடிக்கடி நிகழ்கிறது. அதேபோல் விபத்துகளும், தீவிரவாத செயல்களும் நடந்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் பேரணாம்பட்டு, குடியாத்தம் உட்பட சில பகுதிகளில் அவ்வப்போது நிலஅதிர்வு உணரப்படுகிறது.

இதனால் பேரிடர் காலங்களில் மக்கள் எவ்வாறு பாதுகாப்பாக தப்பிப்பது? பேரிடர் சமயங்களில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை எப்படி பத்திரமாக மீட்பது? திடீர் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது என பல்வேறு மீட்பு பணிகள் குறித்து தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மாநிலம் முழுவதும் பொதுமக்கள் மத்தியில் செயல்விளக்கம் அளித்து வருகின்றனர்.

அதன்படி நேற்று வேலூர் கோட்டை பழைய தாலுகா அலுவலகம் முன்பு தேசிய பேரிடர் மீட்புப்படையை சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் மீட்பு உபகரணங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள், முதலுதவி உபகரணங்கள் ஆகியவற்றுடன் தத்ரூபமாக செயல்விளக்கம் செய்து காண்பித்தனர். இந்நிகழ்ச்சியை மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தொடங்கி வைத்தார். காவல்துறை, தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறை, அவசரகால ஆம்புலன்ஸ் சேவை என பலதுறைகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: