×

சென்னை அசோக் நகரில் ஒரே தெருவில் 10 பேருக்‍கு கொரோனா தொற்று உறுதி!: கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிப்பு..!!

சென்னை: சென்னை அசோக் நகர் பகுதியில் ஒரே தெருவில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அப்பகுதி கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் மீண்டும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை ஏற்படுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது. சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 39,537 தெருக்களில் 507 தெருக்களில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஒரே தேர்வை சேர்ந்த 3 பேருக்கு அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால் அந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா பரவல் காரணமாக மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பெரிய அளவில் மக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சென்னையில் ஒரே தெருவில் 10 பேருக்‍கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் ஒருவருக்கு கொரானா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. அடுத்தடுத்து மேலும் சிலருக்கு தொற்று உறுதியானது. இதை அடுத்து அந்த தெருவில் 83 பேருக்கு மாதிரிகள் எடுத்து பரிசோதிக்கப்பட்டது.

அப்போது, அசோக் நகர் எல்.ஜி.ஜி.எஸ். காலனி 19வது தெருவில் உள்ள 2 வீடுகளில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 10 முதல் 25 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாகும். இதனால் சென்னை அசோக் நகரில் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட எல்.ஜி.ஜி.எஸ். காலனி 19வது தெரு, நோய் கட்டுபாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

Tags : Ashok Nagar, Chennai , Chennai, control area
× RELATED வாக்காளர்களுக்கு பல கோடி ரூபாய்...