×

அதிரும் அமெரிக்கா: ஒமிக்ரான் பரவலால் மருத்துவமனைகளில் நிரம்பி வழியும் குழந்தைகள் வார்டு

நியூயார்க்: அமெரிக்காவில் ஒமிக்ரான் பரவலால் மருத்துவமனைகளில் குழந்தைகள் வார்டு நிரம்பி வழிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் சமீப நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை அதிரடியாக உயர்ந்து வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பிறகு தொற்றின் விழுக்காடு அதிகரித்திருக்கிறது. தற்போது ஒரேநாளில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு அங்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனாவின் மறு உருவம் என்று கூறப்படும் ஒமிக்ரான் தொற்றானது பெரியவர்களை விட குழந்தைகளுக்கே அதிகம் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அமெரிக்காவில் மருத்துவமனைகளில்  குழந்தைகள் வார்டு நிரம்பி வழிகின்றன.

இதுகுறித்து நியூயார்க் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான் பாதிப்பால் குழந்தைகள் வார்டு நிரம்பி வழிவதாக கூறப்பட்டுள்ளது. நியூயார்க் நகரில் மட்டும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகும் குழந்தைகளின் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்து உள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் 5 வயதிற்கு உட்பட்டோர் என்றும் சுகாதாரத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே அமெரிக்காவில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதால் பரிசோதனை செய்துகொள்ள மருத்துவமனைகள் மற்றும் பரிசோதனை நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


Tags : America , Omigron, USA, Hospital, Children's Ward
× RELATED நெஸ்லே குழந்தைகள் உணவில் அதிக...