×

அமெரிக்காவில் ஒரே நாளில் 3 லட்சம் பேருக்கு கொரோனா... ஓமிக்ரான் அச்சுறுத்தலுக்கு இடையே 8 ஆப்ரிக்க நாடுகளின் பயண தடையை நீக்கியது!!

வாஷிங்டன்: அமெரிக்காவில் தினசரி கொரோனா தொற்று 3 லட்சத்தை கடந்து இருப்பது சுகாதாரத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா கிருமி வந்து பிடியை இறுக்கி வருகிறது. அங்கு தினசரி கொரோனா தொற்று 1 லட்சமாக இருந்த நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பிறகு நேற்று ஒரே நாளில் 3, 09,336 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அந்நாட்டில் 1,799 கொரோனா தொடர்பான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

டெல்டா வகை கொரோனா தொற்று பன்மடங்கு அதிகரித்துள்ளதை அடுத்து சோதனைக்காக அமெரிக்கா முழுவதும் பரிசோதனை மையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் கொரோனா சோதனை மைய நிர்வாகிகள் திணறி வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது மக்கள் கூட்டம் கூட்டமாக கொண்டாட்டங்களில் பங்கேற்றதால் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனா பரவல் விஸ்வரூபம் எடுத்துள்ளதை அடுத்து தடுப்பூசி நடவடிக்கைகளை பிடன் அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், போட்ஸ்வானா, தென்ஆப்பிரிக்கா, மொசாம்பிக், ஜிம்பாப்வே, நமீபியா, எஸ்வாடினி, லெசோதோ மற்றும் மாளவி ஆகிய 8 தென்ஆப்பிரிக்க நாடுகளுக்கு விதித்த பயண தடையை நீக்கியுள்ளார்.  இதனை வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்று அதிதீவிரம் அடைந்துள்ள நிலையில், ஆப்ரிக்க நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயண தடையை ஜோ பிடன் அரசு நீக்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 


Tags : Corona ,United States ,Omigron , அமெரிக்கா
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்