விஜயகாந்த் வலியுறுத்தல்: குடிசை மாற்று வாரிய பழைய கட்டிடங்களை ஆய்வுசெய்ய வேண்டும்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட பழழையான குடியிருப்பு திடீரென இடிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாத வண்ணம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள பழைய கட்டிடங்களின் உறுதித்தன்மை குறித்து அரசு அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வின் முடிவில் இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடங்களை கண்டறிந்து அதனை முன்கூட்டியே அகற்ற நடவடிக்கை வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: