×

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன செயற்கைகோள்கள் எங்கள் விண்வெளி நிலையத்தை மோத நெருங்கியது: சீனா குற்றச்சாட்டு

பீஜிங்: ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் செயற்கைகோள்கள் எங்கள் விண்வெளி நிலையத்தை மோதுவது போன்று நெருங்கியது என்று சீனா குற்றம்சாட்டியுள்ளது. விண்வெளி புவி சுற்றுவட்ட பாதையில் சர்வேதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விண்வெளி நிலையத்தை அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் ஆராய்ச்சிக்கு பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில், சீனா தங்கள் நாட்டு ஆய்வுக்காக விண்வெளியில் தனியாக ஒரு நிலையத்தை உருவாக்கி வருகிறது. இந்த விண்வெளி நிலைய பணிகளுக்காக சீன வீரர்கள் அனுப்பப்பட்டு அங்கு தங்கி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இங்கு அமைக்கப்பட்டு வரும் விண்வெளி நிலையத்தை சீர்குலைக்கும் வகையில் எலன் மஸ்க்கை தலைவராக கொண்ட ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் செயற்கைகோள்கள் இருமுறை மோத நெருங்கியதாக சீனா குற்றம்சாட்டியுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தகவல் தொடர்பு சேவை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தியுள்ளன. அந்த செயற்கைகோள்களில் சில கடந்த ஜூலை மற்றும் அக்டோபர் மாதம் சீன விண்வெளி நிலையத்துக்கு அருகே மோதுவது போன்று வந்ததாக அந்நாடு குற்றம்சாட்டியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஐ.நாவிடம் சீனா புகாரும் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : SpaceX ,China , SpaceX Enterprise satellites approaching collision with our space station: China blamed
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...