புழல் மீன் மார்க்கெட்டில் 50 தராசுகள் பறிமுதல்

புழல்: புழல் காவாங்கரை பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டில் மின்னணு எடையில் முறைகேடு நடப்பதாக, திருவள்ளூர் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் சுதா தலைமையில், அதிகாரிகள் நேற்று இந்த மீன் மார்க்கெட்டுக்கு வந்து, கடைகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு தராசுகளை ஆய்வு செய்தனர். அதில், முறையான அனுமதி இல்லாமல், வியாபாரிகள் தராசுகளை பயன்படுத்தி வந்ததும், அவற்றில் முறைகேடு செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, 50க்கும் மேற்பட்ட மின்னணு தராசுகளை அதிரடியாக பறிமுதல் செய்தனர். மேலும், முதல் தடவை என்பதால், மின்னணு தராசுகளில், முறைகேடுகள் செய்து, பயன்படுத்தி வந்த வியாபாரிகளிடம், அடுத்த தடவை, இதுமாதிரி நடந்துகொண்டால், அபராதம் விதித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என   எச்சரித்து சென்றனர்.

Related Stories: