செங்கல்பட்டு: குறைந்த ஓய்வூதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் என, தமிழ்நாடு , தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சங்கத்தின் மாநில தலைவர் பி.ராயமூர்த்தி விடுத்துள்ள அறிக்கை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் ஆகியோருக்கு, சட்டமன்றத்தில் அறிவித்தபடி அகவிலைப்படியினை 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தி வழங்கி உள்ளார். அதை மகிழ்வுடன் வரவேற்கிறோம்.
தேர்தல் காலத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிதி இல்லாத நிலைமையிலும் படிப்படியாக முதல்வர் நிறைவேற்றி வருகிறார். இன்று அகவிலைப்படி ஓய்வூதியர்களுக்கு அறிவிக்கப்பட்டாலும், சிறப்பு ஓய்வூதியம் பெறும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்கவில்லை. அவர்கள் மிகவும் ஏமாற்றத்துடன் உள்ளனர். பல்வேறு சாதனைகளை செய்து வரும் முதலமைச்சர், மாதந்தோறும் மிகக் குறைந்த பென்ஷன் ₹2000 பெற்றுவரும் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்து உதவ வேண்டும் கேட்டுக் கொள்கிறோம் என கூறப்பட்டுள்ளது.