சின்னாறு நீர்த்தேக்கத்தில் இருந்து நீர் திறப்பு

சென்னை: தர்மபுரி மாவட்டம் சின்னாறு நீர்த்தேக்கத்தில் இருந்து பாசனத்திற்கு இன்று முதல் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதுகுறித்து பொதுப்பணித்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: தர்மபுரி மாவட்டம்,  பாலக்கோடு வட்டம், பஞ்சப்பள்ளி கிராமம் சின்னாறு நீர்த்தேக்கத்தில் இருந்து 2021-2022 (பசலி 1431)ம் ஆண்டு பாசனத்திற்கு இன்று (29ம் தேதி) முதல் தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் தர்மபுரி மாவட்டத்திள்ள பழைய ஆயக்கட்டு மற்றும் புதிய ஆயக்கட்டு பரப்பு  பயன் பெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: