காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடந்தது. கலெக்டர் ஆர்த்தி தலைமை வகித்தார். காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, எம்பி செல்வம், எம்எல்ஏ எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சிபுரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் மலர்கொடி குமார் வரவேற்றார். ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு 1000க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் இருந்து, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக்கொண்டார்.

பின்னர் அவர் வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டை, முதியோர் உதவி தொகை, பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் பணி ஆணை, வேளாண் மற்றும் உழவர் பாதுகாப்பு திட்டம் சார்பில் தார்ப்பாய், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் மாடித் தோட்டம், ஊட்டச்சத்து காய்கறிகள், காய்கறி விதைகள் என பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் நித்யா சுகுமார், ஒன்றிய குழு துணை தலைவர் திவ்யபிரியா, இளமது, ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், குமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: