புதுச்சேரி: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு நட்சத்திர விடுதி உள்பட அனைத்து விடுதிகளிலும் 50% சுற்றுலா பயணிகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. புத்தாண்டு கொண்டாட விடுதிகளில் தங்க வருவோர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட நெறிமுறைகளை புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ளது.