×

பொங்கல் பண்டிகைக்கான 21 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஜனவரி 3 அல்லது 4ம் தேதி முதல் வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி பேட்டி

சென்னை: பொங்கல் பண்டிகைக்கான 21 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஜனவரி 3 அல்லது 4ம் தேதி முதல் வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் உள்ள  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் இருப்பு வைக்கப்பட்டிருக்கும் கிடங்கில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தர ஆய்வு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; பொங்கல் பண்டிகைக்கான இருபத்தியொரு அத்தியாவசிய பொருள்கள் கொண்ட தொகுப்பானது 2 கோடியே 15 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படும்.

21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பினை பெறுவதற்காக கைரேகை கட்டாயம் இல்லை. குடும்ப அட்டையில் உள்ள நபர்கள் யார் வேண்டுமானாலும் நியாயவிலைக் கடையில் வந்து பெற்றுச் செல்லலாம். அதே நேரத்தில் வழக்கமான பொருட்களை பெறுவதற்கு கைரேகை கட்டாயம். இந்த பரிசு பொருட்கள் அனைத்தும் ஜனவரி 2-ஆம் தேதிக்குள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள நியாயவிலை கடைகளுக்கு சென்றடைந்து விடும். மூன்றாம் தேதி அல்லது நான்காம் தேதி முதல் பொருட்கள் வழங்கப்படும் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; பொங்கல் பண்டிகைக்கு பணம் வழங்குவது தொடர்பாக தமிழக முதலமைச்சர் அறிவிப்பார்.

தமிழகத்தில் 500 கலைஞர் உணவகம் தொடங்குவது தொடர்பாக ஒன்றிய அரசுடன் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. எளியவர்களின் பசியைப் போக்கும் வகையில் உணவகம் தொடங்க மாநில அரசு இடம் வழங்கும் எனவும் உணவகத்திற்கு தேவையான அனைத்து செலவுகளையும் ஒன்றிய அரசு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


Tags : Pongal Festive ,Minister ,Sakarabani , A package of 21 essentials for Pongal will be distributed from January 3 or 4: Interview with Minister Chakrabarty
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...