திருவொற்றியூரில் குடியிருப்பு இடிந்த விபத்தில் மக்களை துரிதமாக வெளியேற்றி உயிரிழப்பு ஏற்படாமல் தடுத்த தனியரசுவிற்கு முதல்வர் பாராட்டு

சென்னை: திருவொற்றியூர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய பழைய குடியிருப்பு இடிந்து விழுந்த விபத்தில், குடியிருப்பு மக்களை துரிதமாக வெளியேற்றி உயிரிழப்பு ஏற்படாமல் தடுத்த தனியரசுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து வாழ்த்திப் பாராட்டினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (28.12.2021) தலைமைச் செயலகத்தில், திருவொற்றியூர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய பழைய குடியிருப்பு இடிந்து விழுவதற்கு முன்பாக, தக்க தருணத்தில் குடியிருப்பு வாசிகளை எச்சரிக்கை செய்து, அனைவரையும் துரிதமாக வெளியேற்றி உயிரிழப்பு ஏற்படாமல் தடுத்த தனியரசு என்பவரை நேரில் அழைத்து வாழ்த்திப் பாராட்டினார்.

திருவொற்றியூரில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தினால் 1993-ல் கட்டப்பட்ட பழைய குடியிருப்பு நேற்று (27.12.2021) இடிந்து விழுந்ததில் 24 வீடுகள் முழுவதுமாக சேதமடைந்தன. “D” பிளாக் குடியிருப்புக் கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டதை அறிந்து இதுகுறித்து உடனடியாக அப்பகுதியைச் சேர்ந்த தனியரசு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தார். மேலும், அக்கட்டிடத்தில் விரிசல் அதிகமாவதை கண்டறிந்து, மக்களை உடனடியாக பாதுகாப்பாக வெளியேறிட எச்சரிக்கை செய்ததால் இவ்விபத்தில் பெரும் உயிரிழப்பு தடுக்கப்பட்டது.

Related Stories: