×

புஷ்பவனம் கடற்கரை பகுதியில் 3 கி.மீ. தூரத்திற்கு சேறு: மீனவர்கள் அவதி

வேதாரண்யம்: வேதாரண்யம் தாலுகா புஷ்பவனம் மீவை கிராமத்தில் சுமார் 100 பைபர் படகுகள் உள்ளன. இந்த மீனவர்கள் நாள்தோறும் காலை வேளைகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்று மறுநாள் கரை திரும்புவார்கள். இந்நிலையில் கடந்த சில தினங்களாக கடற்கரை பகுதியில் சேறு தள்ளி இருந்தது திடிரென்று கடற்கரையோரம் மூன்று கிலோ மீட்டருக்கு சுமார் மூன்று அடிமுதல் நான்கு அடிவரை சேறு கடற்கரையில் ஒதுங்கியுள்ளது. இதானால் படகை கடலில் செலுத்த முடியமால் மீனவர்கள் கடும் அவதிபடுகின்றனர். பைபர் படகை கடலில் செலுத்த குறைந்தபட்சம் 5 மணிநேரம் போராடி கடலுக்கு செல்கின்றனர். இரட்டை இன்ஜீன்வைத்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் படகை 10 ஆட்கள் வைத்து 4 அடி சேற்றில் தள்ளி கடலுக்கு செல்கின்றனர்.

இதனால் பிடித்த மீன்களை கரைக்கு கொண்டுவந்து விற்பதற்கும் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த மீனவ கிராமத்தில் சுனாமியின் போது சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு சேறு கடற்கரையில் ஒதுங்கி இருந்தது. இதனை அரசு இயந்திரம் மூலம் மூன்று மாதம் போராடிய அகற்றி கொடுத்தனர். அதேபோல் தற்போது மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு கடற்கரை முழுவதும் நான்கு அடி சேறும் கடல் உள்பகுதியில் ஒரு கிலோமீட்டர் நீளத்திற்கு சேறு வந்துள்ளது. இதானால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கபட்டுள்ளது.

Tags : Pushpavanam , Pushpavanam is located 3 km from the beach. Mud in the distance: Fishermen suffer
× RELATED நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம்...