கேப்டன் ரோகித்சர்மாவுக்காக ஒன்டே அணி தேர்வு தள்ளிவைப்பு: அஸ்வினுக்கு மீண்டும் வாய்ப்பு

மும்பை: இந்தியா-தென்ஆப்ரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிந்த பின்னர் 3 ஒரு நாள் போட்டிகள் முறையே ஜன.19, 21, 23ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படுவதாக இருந்தது. ஆனால் தற்போது வார இறுதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொடையில் காயம் அடைந்த ரோகித்சர்மா உடற்தகுதியில் குழப்பம் நீடிக்கிறது. அவர் உடற்தகுதியை மீண்டும் பெற இன்னும் சில நாட்கள் ஆகலாம் என தெரிகிறது.

இதனால் அணி தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது நடந்து வரும் முதல் டெஸ்ட் முடிந்த பின்னர் அநேகமாக 30 அல்லது 31ம் தேதி அணி தேர்வு இருக்கலாம். ஒருவேளை அவர் உடற்தகுதியை பெற தவறினால் துணை கேப்டன் கே.எல்.ராகுல் அணியை வழிநடத்துவார். ஆல்ரவுண்டர்கள் ஜடேஜா, அக்சர் பட்டேல் காயத்தில் இருந்து மீளாததால் ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் ஒருநாள் அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளது.

Related Stories: