திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் அர்ச்சகர் பயிற்சி பள்ளி மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப தேதி நீட்டிப்பு..!!

சென்னை: திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் அர்ச்சகர் பயிற்சி பள்ளி மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப தேதி நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாடு முதலைமைச்சர்  மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கடந்த மானியக் கோரிக்கையின் போது சாதி வேறுபாடின்றி அர்ச்சகர்களை உருவாக்கும் இந்து சமய அறநிலையத்துறையின் ஆறு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் ரூபாய் 1 கோடியே 50 இலட்சம் செலவில் மேம்படுத்தப்படும் என்று அறிவித்தார்கள்.

அந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக திருச்சி ஸ்ரீரங்கம்  அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் அர்ச்சகர்களை உருவாக்கும் வைணவ பயிற்சிக்கான ஓராண்டு சான்றிதழ் படிப்பிற்கு மாணவர்கள் சேர்க்கை காண விண்ணப்பம் கடந்த 24.12.2021  அன்று மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டுமென்று வெளியிடப்பட்டது. தற்போது பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இந்துக்களாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் 14 வயது நிரம்பியவராகவும் அதிகபட்சம் 24  வயதிற்கு மேற்படாமல்  இருத்தல் வேண்டும். இந்து வைணவ கோட்பாடுகளை கடைப்பிடிப்பவர்களாக இருத்தல் வேண்டும்.

பயிற்சி பெறும் மாணவர்கள் பயிற்சி நிலைய வளாகத்திலேயே தங்கி பயில வேண்டும். பயிற்சிக்கு தேர்வு செய்யபடும் மாணவர்களுக்கு உணவு, சீருடை, உறைவிடம், பயிற்சி காலத்தில் மாதம் ஒன்றுக்கு ரூ.3000/- உதவித்தொகை ஆகியவை வழங்கப்படும். மாணவர்கள் தேர்வு, தேர்வுக்குழுக்கு உட்பட்டது. விணப்பங்கள் வந்து சேர வேண்டியகடைசி நாள்: 24.01.2021 அன்று மாலை 5.00 மணி.  பயிற்சி காலம் ஒரு ஆண்டுகள் ஆகும்.  இப்பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் சேர்க்கை படிவங்களை திருக்கோயில் அலுவலகத்திலும், www.hrce.tn.gov.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் அவர்கள், அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம் திருச்சி. இந்த அர்ச்சகர்களை உருவாக்கும்  வைணவ பயிற்சிக்கான சான்றிதழ் படிப்பில் சேர ஆர்வமுள்ள மாணவர்கள் விண்ணபித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Related Stories: