நெமிலி அருகே வடகிழக்கு பருவமழை பெய்தும் ஏரிக்கு நீர் வராததால் விவசாயிகள் அதிர்ச்சி

நெமிலி: நெமிலி அருகே வடகிழக்கு பருவமழை பெய்தும் போதிய அளவு ஏரிக்கு நீர் வராததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.தமிழகத்தில் கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கி கன மழை பெய்தது. இதனால் அனைத்து ஆறுகள், ஏரி, குளம், குட்டை ஆகிய  நீர்நிலைகள் மழை நீரால் நிரம்பியது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த பனப்பாக்கம் பகுதியில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியை சுற்றி சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளது. இந்த ஏரியின் நீர்வரத்து கொண்டு 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஏரியில் தற்போது வரை நீர் வரத்து வரவில்லை. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அதிக அளவு மழை பெய்து  நிலையிலும், தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் முழுமையாக நிரம்பிய நிலையிலும், நெமிலி அடுத்த பனப்பாக்கம் பகுதியில் உள்ள ஏரியானது நீர்வரத்து வராததால் வறண்டு கிடக்கிறது. இதனால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமலம் ஏமாற்றத்தில் விரக்தி அடைந்துள்ளனர்.இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், பனப்பாக்கம் பகுதியில் உள்ள ஏரியானது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக பராமரிப்பு செய்யாததால் ஏரிக்கு நீர் வரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் ஏரியில் சமூக விரோதிகள் ஆக்கிரமிப்பு செய்ததாகவும், சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறையினர் அதிகாரிகள் ஏரிக்கு நீர்வரத்து கால்வாய்கள் எங்கே உள்ளது என்று கூட தெரியாமல் அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதும், இதற்கு காரணம் என தெரிவித்தனர்.உடனடியாக பனப்பாக்கம் ஏரிக்கு  சம்பந்தப்பட்ட இடங்கள்  மற்றும் நீர்நிலை கால்வாய்களை ஆக்கிரமிப்பை அகற்றி ஏரிக்கு நீர்வரத்து முறையாக செயல்பட வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: