×

தேன்கனிகோட்டை அருகே ராகி, பீன்ஸ் பயிரை நாசம் செய்த யானைகள்

தேன்கனிக்கோட்டை: தேன்கனிகோட்டை அருகே யானைகள் விவசாயிகள் பயிரிட்டு இருந்த 5 ஏக்கர் ராகி மற்றும் 2 ஏக்கர் பீன்ஸ் தோட்டங்களை சேதப்படுத்தியது. சேதமான பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கர்நாடக மாநிலத்தில் இருந்து வெளியேறிய 70க்கும் மேற்பட்ட யானைகள் தளி, ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை, ஊடேதுர்க்கம், ஓசூர் வனப்பகுதிகளில் முகாமிட்டு சுற்றித்திரிந்து வருகிறது. தேன்கனிக்கோட்டை நொகனூர் வனப்பகுதியில் முகாமிட்டுள்ள 30க்கும் மேற்பட்ட யானைகள் நேற்று முன்தினம் இரவு அருகே உள்ள கண்டகாணப்பள்ளி கிராமத்தில் விவசாயிகள் திருப்பதியப்பாவிற்கு சொந்தமான 5 ஏக்கர் ராகி தோட்டம் மற்றும் தொட்டையாவின் ஒரு ஏக்கர் பீன்ஸ், வெங்கடேஷ்ரெட்டி என்பவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் பீன்ஸ் பயிர்களை சேதப்படுத்தி சென்றன.

வழக்கம் போல், நேற்று காலை தோட்டங்களுக்கு சென்ற விவசாயிகள், யானைகளால் பயிர்கள் சேதமானதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். யானைகளால் பயிர்கள் சேதமானது விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கர்நாடக மாநிலத்தில் இருந்து வெளியேறிய 70க்கும் மேற்பட்ட யானைகள் தளி, ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை, ஊடேதுர்க்கம், ஓசூர் வனப்பகுதிகளில் முகாமிட்டு சுற்றித்திரிந்து வருகிறது.


Tags : Ragi ,Thankanicote , Elephants destroy ragi and beans near Dhenkanikottai
× RELATED ராகி சப்பாத்தி