×

மன்னார்குடி- ஜெய்ப்பூருக்கு 1.50 லட்சம் முட்டைகள் ரயிலில் அனுப்பி வைப்பு

மன்னார்குடி: நாமக்கல்லில் இருந்து 1.50 லட்சம் முட்டைகள் நான்கு மினி லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு மன்னார்குடி ரயில் நிலையத்தில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரத்திற்கு பயணிகள் ரயில் மூலம் அனுப்பி வைக்கப் பட்டது.இந்தியாவில் முட்டை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாமக்கல் மண்டலத்தில் இருந்து சாலை போக்குவரத்து மூலமும் ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ரயில்கள் மூலமும் வெளி மாநிலங்களுக்கு முட்டைகள் கொண்டு செல்லப் படுகின்றன.

இந்த நிலையில், நாமக்கல்லில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரு க்கு 1.50 லட்சம் முட்டைகள் 750 பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டு சாலை மார்க்கமாக நான்கு மினி லாரிகள் மூலம் மன்னார்குடி ரயில் நிலையத்திற்கு நேற்று காலை கொண்டு வரப்பட்டது.
பின்னர், மன்னார்குடியில் இருந்து ஜோத்பூருக்கு செல்லும் பகல்கீ கோத்தி பயணிகள் விரைவு ரயிலில் முட்டைகள் அடங்கிய பெட்டிகள் ஏற்றப்பட்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு அனுப்பி வைக்கப் பட்டது. இப்பணிகளை நிலைய கண்காணிப்பாளர் மனோகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Tags : Mannargudi- ,Jaipur , 1.50 lakh eggs sent by train to Mannargudi-Jaipur
× RELATED பறக்கும்படை சோதனையில் ரூ.64,390 பறிமுதல்