காந்தியின் எண்ணங்களை சிறைபிடிக்க முடியாது: ராகுல்காந்தி பதிலடி

புதுடெல்லி: காந்தியை அவமதித்து பேசிய இந்து தலைவர்கள், `காந்தியின் எண்ணங்களை சிறைபிடிக்க முடியாது,’ என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் பதிலடி கொடுத்துள்ளார். சட்டீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூரில் உள்ள ராவண் பாதா வளாகத்தில் தர்ம சன்சத் என்ற இந்துக்கள் அமைப்பின் மாநாடு 2 நாட்கள் நடந்தது. இதில் பேசிய தலைவர்கள் மத வன்முறையை தூண்டும் வகையில் பேசினர்.

இந்த கூட்டத்தில் பேசிய இந்து மதத் தலைவர்களின் ஒருவரான காளிசரண் மகாராஜ், காந்தி குறித்து தரக்குறைவாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மற்றொரு இந்து தலைவர் கோட்சேதான் இந்து மதத்தின், உண்மையின் அடையாளமாக விளங்கியதாக புகழ்ந்து பேசினார். இந்நிலையில், மகாத்மா காந்தியை அவமதித்து பேசிய இந்து தலைவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், `என்னை சங்கிலியால் கட்டி, சித்ரவதை செய்து, எனது உடலை அழிக்க முடியும். ஆனால், எனது எண்ணங்களை சிறைபிடிக்க முடியாது,’ என்று மகாத்மா காந்தியடிகள் கூறியதை ராகுல் மேற்கோள்காட்டி, காந்தியின் எண்ணங்களை சிறைபிடிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

Related Stories: