×

கும்மிடிப்பூண்டி ஒன்றிய கவுன்சிலர் கூட்டம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை பகுதியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர் கூட்டம் ஒன்றிய குழு தலைவர் கே.எம். எஸ். சிவகுமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் ஒன்றிய குழு துணை தலைவர் மாலதி குணசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாசுதேவன், நட்ராஜ், பொறியாளர் நரசிம்மன், துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.  

கூட்டத்தில்  கலந்து கொண்ட ஒன்றிய கவுன்சிலர்கள் ரோஜா ரமேஷ், ரவகிளி, ஆரோக்கியமேரி, சீனிவாசன், ரேவதிகுமார், உஷா, மெய்யழகன், கௌரி அரிதாஸ், அமலா சரவணன், சங்கர், மணிமேகலை கேசவன், ஜெயச்சந்திரன், சிட்டிபாபு, சிவா, கலாஉமாபதி, பாசம் அன்பு , ரவிக்குமார், சீனிவாசன், மதன்மோகன், ஜோதி, நாகராஜ், தேவிசங்கர் , ஜெயந்தி, இந்திர திருமலை ஆகியோர்  சிப்காட் இயங்கிவரும் ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் வெளியேறும் கழிவுநீர் பாதிப்பு குறித்தும்,  வருவாய் துறை அதிகாரிகள் பட்டா வழங்க லஞ்சம் கொடுத்தால் மட்டும் பட்டா கிடைக்கிறது எனவும், அங்கன்வாடி கட்டிடங்கள் புதிதாக அமைக்கவும்  காவல் நிலையத்தில் புகார் மனு அளித்த உடன் அதற்கான ஒப்புகை சீட்டு வழங்க வேண்டும் என்றும், கோயில் நிலங்களை மீட்கவும், பெத்திக்குப்பம் பகுதியில் கஞ்சா விற்பனையை தடுக்கவும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை குறித்து அந்தந்த துறை அதிகாரிகளிடம் எடுத்துரைத்தனர்.

இதற்கு ஒன்றிய குழு தலைவர் கே. எம். எஸ். சிவகுமார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாசுதேவன், நடராஜர்  ஆகியோர் மேற்கண்ட  விஷயங்கள் குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கடந்த வாரம் புதிய கட்டிடம் திறப்பு விழாவுக்கு அழைப்பு மற்றும் கல்வெட்டில் பெயர்கள் இல்லாத காரணத்தினால் மாவட்ட கவுன்சிலர்கள் சாரதாம்மா முத்துசாமி, ராமஜெயம் ஆகியோர் கூட்டத்தை புறக்கணித்தனர்.


Tags : Gummidipoondi Union Councilor Meeting , Gummidipoondi Union Councilor Meeting
× RELATED கும்மிடிப்பூண்டி ஒன்றிய கவுன்சிலர் கூட்டம்