×

மாகரல் கண்டிகை கிராமத்தில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்

ஊத்துக்கோட்டை: மாகரல் கண்டிகை கிராமத்தில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பால் வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர் பங்கேற்று ஏழை எளியோருக்கு வழங்கினார். பெரியபாளையம் அருகே எல்லாபுரம் மத்திய ஒன்றிய திமுக சார்பில் மாகரல் கண்டிகை கிராமத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், எல்லாபுரம் மத்திய ஒன்றிய செயலாளர் கோடுவெளி தங்கம் முரளி தலைமை தாங்கினார். மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் வி.ஜெ.சீனிவாசன், எம்.குமார், பி.ஜி.முனுசாமி, ஜி.பாஸ்கர், டி.பாஸ்கர், லோகநாதன், அன்பு, தர், சுப்பிரமணி, நாராயணசாமி, ஆளவந்தான், உமா சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இ.சுப்பிரமணி நிகழ்ச்சி ஏற்பாடு செய்து வரவேற்றார்.  

சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக பால் வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் 200  ஏழை எளிய மக்களுக்கு அரிசி பருப்பு, எண்ணெய் ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கினர். பின்னர், மாகரல் கண்டிகை கிராமத்தில் ஏரிக்கு செல்லும் கால்வாயின் குறுக்கே உள்ள சேதமடைந்த பாலத்தை பார்வையிட்டனர்.

Tags : Maharal Kandikai village ,Minister ,NM Nasser , Welfare assistance to the poor in Maharal Kandikai village: Minister NM Nasser presented
× RELATED பணம் இல்லாததால் நிதியமைச்சர் நிர்மலா...