சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ரூ.1.15 கோடி ஹவாலா பணம் சிக்கியது: பெங்களூர் ஆசாமி கைது

சென்னை: சென்னையிலிருந்து சார்ஜா செல்லும் விமானத்தில் பெருமளவு வெளிநாட்டு பணம் கடத்துவதாக பெங்களூருவில் உள்ள அலுவலகத்திலிருந்து, சென்னை விமான நிலைய சுங்கத்துறைக்கு ரகசிய தகவல் வந்தது. இந்நிலையில் நேற்று சென்னையிலிருந்து அபுதாபி, சார்ஜா செல்ல இருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகளை சுங்க அதிகரிகள் தீவிரமாக கண்காணித்தனர். கர்நாடகா மாநிலத்தைசேர்ந்த 32 வயது ஆண் பயணியின் சூட்கேஸ்சில், அமெரிக்க டாலர்கள் மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்தனர். அதன் இந்திய மதிப்பு ரூ.1.15 கோடி. சுங்கத்துறையினர் பணத்தை பறிமுதல் செய்து கர்நாடகா பயணியை கைது செய்தனர். விசாரணையில், அந்த பணம் கணக்கில் இல்லாத ஹவாலா பணம் என்று தெரியவந்தது.

Related Stories: