×

ஸ்ரீமுஷ்ணம் அருகே இன்று பரபரப்பு; கணவரை பிரிந்து வாழும் பெண்ணுக்கு சரமாரி கத்தி வெட்டு: கள்ளக்காதலன் வெறிச்செயல்- போலீசார் விசாரணை

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அருகே கள்ளத்தொடர்பை பெண் ஒருவர் திடீரென நிறுத்தியதால் ஆத்திரமடைந்த கள்ளக்காதலன் கத்தியால் சரமாரி வெட்டியதால் அந்தப்பெண் படுகாயம் அடைந்தார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே சாத்தாவட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வி (43). இவருக்கு மாமங்கலம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி பழனி (50) என்பவருக்கும் 11 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு 15 வயதில் மகன் இருக்கிறார். இவர் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பழனி சென்னையில் தங்கியிருந்து வேலை செய்து வருகிறார். ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் கட்டிட தொழிலாளியாக செல்வி வேலை செய்து வருகிறார். இவர் ஸ்ரீமுஷ்ணம் மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள சர்ச்சுக்கு ஞாயிற்றுக்கிழமை ேதாறும் செல்வது வழக்கம். அப்போது டி.வி.புத்தூர் பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு(35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவருக்கு திருமணம் ஆகவில்லை.

நாளடைவில் இந்த கள்ளக்காதலாக மாறியது. இருவரும் கடந்த 7 வருடமாக தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் செல்வி தனது அக்கா மகளுடன் சில நாட்களுக்கு முன்பு திருநாவுக்கரசு வீட்டுக்கு சென்று இனிமேல் எங்கள் வீட்டுக்கு வரக்கூடாது என திட்டி அவரை தாக்கினார்களாம். பின்னர் இருவரும் திரும்பி வந்து விட்டனர். இந்நிலையில் இன்று காலை திருநாவுக்கரசு செல்வி வீட்டுக்கு வந்து, திடீரென வரக்கூடாது என்று சொன்னால் எப்படி? உன்னை நம்பித்தான் நான் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறேன் என்று கேட்டாராம்.

இதில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது.  ஆத்திரம் அடைந்த திருநாவுக்கரசு பிளேடால் செல்வியின் முகத்தில் கிழிக்க முயன்றுள்ளார். அவர் திடீரென முகத்தை திருப்பியதால் தப்பினார். ஆனாலும் ஆத்திரம் தீராத திருநாவுக்கரசு அங்கு கிடந்த கத்தியை எடுத்து செல்வியின் கழுத்தில் சரமாரி வெட்டி உள்ளார். இதில் ரத்தக்காயம் அடைந்த அவர் மயங்கி விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து திருநாவுக்கரசுவை மடக்கிப்பிடித்து கை கால்களை கம்பத்தில் கட்டி வைத்து சரமாரி தாக்கினர்.

பின்னர் போலீசில் ஒப்படைத்தனர். படுகாயம் அடைந்த செல்வியை 108 ஆம்புலன்சில் ஏற்றி சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கிடையே போலீசில் ஒப்படைக்கப்பட்ட திருநாவுக்கரசுவிடம் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் முஷ்ணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Sriemushnam , Trouble today near Srimushnam; Woman stabbed to death by her estranged husband: False boyfriend freaks out - Police investigation
× RELATED மரத்தில் பைக் மோதி 2 வாலிபர்கள் பலி