×

அமைச்சரின் எச்சரிக்கை அறிவிக்கையால் சன்னி லியோன் ஆடிய பாடலின் வரி நீக்கம்: பாடலாசிரியர் திடீர் அறிவிப்பு

போபால்: மத்திய பிரதேச அமைச்சரின் எச்சரிக்கை அறிவிக்கையால் நடிகை சன்னி லியோன் ஆடிய குத்தாட்ட பாடலின் சர்ச்சைக்குரிய வரிகள் நீக்கப்படுவதாக பாடலாசிரியர் தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகை சன்னி லியோனின் ‘மதுபன்’ பட பாடல் ஒன்றுக்கு ஆடிய குத்தாட்டம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. அந்த பாடலில் வரும் வரிகள் மற்றும் ஆபாச நடனம் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக இருப்பதாக பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இவ்விவகாரம் தொடர்பாக மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஷ்ரா, ‘சன்னி லியோன், ஷரிப், தோஷி ஆகியோர் சர்ச்சைக்குரிய பாடலை யூடியூப்பில் இருந்து நீக்காவிட்டால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறினார். அதையடுத்து அந்த பாடலின் பாடலாசிரியர் ஷெரீப், சர்ச்சைக்குரிய பாடலின் வரிகளை மாற்றுவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘சர்ச்சைக்குரிய பாடல் வரிகள் மாற்றப்படும் என்று அறிவித்துள்ளது.

மேலும், அடுத்த மூன்று நாட்களில் அனைத்து பிளாட்ஃபார்ம்களிலும் பழைய பாடல்களுக்குப் பதிலாக புதிய பாடல் வெளியாகும் என்று பாடலை வெளியிட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags : Sunny Leone ,Minister , Line removal of song sung by Sunny Leone due to Minister's warning: Sudden announcement by the lyricist
× RELATED தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிசாவை ஆள வேண்டுமா? : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கேள்வி