×

ஒமிக்ரான் பரவல் அச்சத்தால் சீரடி சாய்பாபா கோயில் இரவு தரிசனம் ரத்து

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால், மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வழிபாட்டு தலங்கள், திருமண விழாக்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே பங்கேற்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற புனித ஸ்தலமான சீரடி சாய்பாபா கோயிலில் பக்தர்களின் வருகை அதிகரித்து உள்ளதால், நோய் பரவல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதனால், மாவட்ட கலெக்டர் வெளியிட்ட அறிக்கையில், ‘சீரடி சாய்பாபா கோயிலில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரையில் சாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. ஆரத்தி நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் மட்டுமே பங்கேற்பார்கள். பக்தர்கள் யாரும் ஆரத்தியில் பங்கேற்க அனுமதி கிடையாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : Night ,Siradi Sai Baba , Night darshan at Siradi Sai Baba temple canceled due to fear of Omigron spread
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்