கொடைக்கானலில் பச்சை பட்டாணி அறுவடை தாமதம்-விலை அதிகரிக்க வாய்ப்பு

கொடைக்கானல் : கொடைக்கானல் மலைக்கிராமங்களில் பச்சை பட்டாணி அறுவடை தாமதமாக துவங்கியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல் மலைக்கிராமங்களான அட்டுவம்பட்டி, வில்பட்டி, மாட்டுப்பட்டி, அடிசரை, பள்ளங்கி உள்ளிட்ட பகுதிகளில் அதிக சுவை மிகுந்த பச்சை பட்டாணி அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளன. பனிக்காலங்களில் மட்டுமே விளையும் உயர்ரக பச்சை பட்டாணி ரகங்கள் முதற்கட்டமாக அறுவடை செய்யப்பட்டு வருகிறது.

அதிக அளவில் மழை பெய்ததால் விளைச்சலும் பாதித்துள்ளது.  நல்ல விளைச்சல் இல்லாமலும்  மழை காரணமாக  முதற்கட்ட அறுவடை தற்போது தாமதமாக துவங்கி உள்ளது. கிலோ 80 முதல் 100 ரூபாய் வரை சில்லரை விலையில் விற்பனையாவதுடன் மேலும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.உள்ளூர் மார்க்கெட்டிலும் விலை ஓரளவுதான் கிடைத்து வருகிறது.தொடர்ந்து நிலவும் பனிப்பொழிவு காரணமாக  பச்சைபட்டாணி பயிர்கள் கூடுதல் மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது என்று என்று விவசாயிகள் கூறியுள்ளனர்.

Related Stories: