திண்டுக்கல் அருகே குப்பையை எரிப்பதால் காற்று மாசு அதிகரிப்பு

திண்டுக்கல் :  திண்டுக்கல் -  கரூர் ரோட்டில் உள்ள மயானத்தில் குப்பை குவிக்கப்பட்டு  தீவைக்கப்படுவதால் காற்று மாசடைவதுடன், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.திண்டுக்கல் - கரூர் ரோட்டில் பெஸ்கி கல்லூரி அருகே பழைய மயானத்தில் குப்பைகள் கொட்டி குவிக்கப்படுகிறது. இதனால் மயானம் நிரம்பி சாலை வரை குப்பைகள் பரவிக் கிடக்கிறது. இதனால் அந்த வழியாக மக்கள் செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. பொதுமக்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த மைக்கேல் கூறியதாவது: மயானத்தில் குப்பைகளை குவித்து அடிக்கடி தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் காற்று மாசடைகிறது. இதனால் பொதுமக்கள் சுவாசிக்க முடியாமலும். பலர் சுவாசக்கோளாறாலும் அவதிப்படுகின்றனர். குப்பை அதிகமாக கொட்டுவதால் துர்நாற்றம் அதிகமாகிறது. இங்குள்ள வீடுகளுக்குள் பூச்சிகளும், கொசுக்களும் மண்டிக் கிடக்கின்றன. நிம்மதியாக தூங்க முடியவில்லை. கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. மழை பெய்தால் துர்நாற்றம் மேலும் அதிகமாகிறது.

அதனால் நரக வேதனையில் மக்கள் வசிக்க வேண்டியுள்ளது. மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று ஊராட்சி நிர்வாகம் தயாரித்தால் இந்த மாதிரி பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை. குப்பைகளை அப்புறப்படுத்தி மயானம் மட்டும் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

35. பட்டிவீரன்பட்டி பகுதியில் மானாவரி பயிர்களின் விளைச்சல் அதிகரிப்பு

பட்டிவீரன்பட்டி : பட்டிவீரன்பட்டி பகுதியில் மானாவரி பயிர்களின் அறுவடை தொடங்கி நடந்து வருகிறது.பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள அய்யம்பாளையம், தேவரப்பன்பட்டி, சித்தரேவு, சித்தையன்கோட்டை, சிங்காரக்கோட்டை, ஒட்டுப்பட்டி, நரசிங்கபுரம் மற்றும் தாண்டிக்குடி மலை அடிவாரத்தில் உள்ள கோம்பை பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு விவசாயிகள் மானாவரி விவசாயப் பயிர்களான வெள்ளை சோளம், நிலக்கடலை, கம்பு, மக்காச்சோளம் போன்ற பயிர்களை நடவு செய்தனர்.

தற்போது இந்த மானாவரிபயிர்கள் வளர்ந்து அறுவடை செய்ய தயாராக உள்ளதால், இதன் அறுவடை தொடங்கியுள்ளது. இப்பகுதியில் பெய்த தொடர்மழை காரணமாக சென்ற ஆண்டை இந்த ஆண்டு விளைச்சல் அதிகரித்துள்ளது.இது பற்றி மானாவரி விவசாயி கூறியதாவது: இந்த வருடம் ஆடிமாத துவக்கத்தில் மழை இல்லை. ஆவணி மாதத்தில் தான் மழை பெய்தது. இதனால் தாமதமாகத் தான் விவசாய பணிகளை துவக்கினோம்.

தற்போது பயிர்கள் செழித்து வளர்ந்து விட்டதால், இதனை அறுவடை செய்து வருகிறோம். பொதுவாக, மானாவரி விவசாயிகள் பெரும்பாலும் சிறிய அளவிலான விவசாய நிலங்களே வைத்துள்ளனர். இதனால் இதனை உள்ளுர் வியாபாரிகளிடம் மட்டுமே விற்கும் நிலை உள்ளது.  இதனால் அரசு நெல்லை கொள்முதல் செய்வது போல் சிறு, குறு விவசாயிகளிடமிருந்து சத்துமிகுந்த சிறு தானியங்களான கம்பு, சோளம் போன்றவற்றை நேரிடையாக கொள்முதல் செய்ய வேண்டும். இதனால் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும்’’ என்றார்.

Related Stories: