×

சர்ச்சை சாமியார் அன்னபூரணியின் புத்தாண்டு அருள்வாக்கு நிகழ்ச்சிக்கு தடை :கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாக வழக்கு!!

டெல்லி : சர்ச்சை சாமியார் அன்னபூரணி புத்தாண்டு தினத்தில் செங்கல்பட்டில் நடக்க இருந்த அருள்வாக்கு நிகழ்ச்சிக்கு போலீசார் தடை விதித்துள்ளனர். கடந்த வாரம் கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாக அன்னபூரணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பெண் சாமியார் அன்னபூரணி கடந்த வாரம் செங்கல்பட்டில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்ற அருள்வாக்கு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவரது காலில் விழுந்து பக்தர்கள் கதறி அறியும் காட்சி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டது.

ஏற்கனவே திருமணம் ஆன ஒருவருடன் குடும்பம் நடத்தி சர்ச்சையில் சிக்கியவர் அன்னபூரணி என விமர்சித்த நெட்டிசன்கள், அது தொடர்பான வீடியோக்களையும் வெளியிட்டனர். இந்த நிலையில், அன்னபூரணி மீண்டும் வரும் 1ம் தேதி செங்கல்பட்டில் உள்ள அதே திருமண மண்டபத்தில் அருள்வாக்கு நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக விளம்பரம் செய்யப்பட்டது. இதையடுத்து மண்டபத்திற்கு சென்று விசாரணை நடத்திய போலீசார், 1ம் தேதிக்கு நடக்க இருந்த நிகழ்ச்சிக்கு முன் அனுமதி பெறாததால் தடை விதித்தனர். ஏற்கனவே நடத்திய அருள்வாக்கு நிகழ்ச்சியில் கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாகவும் அன்னபூரணி மீது செங்கல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் அன்னபூரணியை போலீசார் தேடி வருவதை அறிந்து அவர் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. 


Tags : Annapoorni ,New Year's Eve , சர்ச்சை சாமியார் அன்னபூரணி
× RELATED மராட்டியம்: மராத்தியர்களின் புத்தாண்டான குடி பத்வா கோலாகல கொண்டாட்டம்