சென்னை : திருவொற்றியூர் குடியிருப்பு இடிந்ததால் பாதிக்கப்பட்ட 24 குடும்பத்திற்கும் தலா ரூ.1 லட்சம் நிவாரணம் இன்று மாலைக்குள் வழங்கப்படும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். சென்னையில் மட்டும் அனைத்து தொகுதிகளிலும் மக்கள் வாழ்வதற்கே தகுதி இல்லாத 23,000 வீடுகள் உள்ளன என்று குரிப்பிட்ட அமைச்சர், பழமையான வீடுகள் அனைத்தும் 4 ஆண்டுகளில் அகற்றப்பட்டு புதிய வீடுகள் தரப்படும் என்றார்.