திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பாலிவுட் நடிகை ஜான்விகபூர் சுவாமி தரிசனம்

திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பாலிவுட் நடிகை ஜான்விகபூர் சுவாமி தரிசனம் செய்தார்.சித்தூர் மாவட்டம், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பாலிவுட் நடிகை ஜான்விகபூர் நேற்று முன்தினம் திருமலைக்கு வந்தார். இந்நிலையில், நேற்று காலை விஐபி தரிசனத்தில் அவர் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் அதிகாரிகள் லட்டு உள்ளிட்ட தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். கோயிலுக்கு வெளியே வந்தபோது நடிகை ஜான்வியை பார்த்த அவரது ரசிகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

ஜான்விகபூர் தற்போது ‘தோஸ்தானா-2’ மற்றும் ‘குட்லாக் ஜெர்ரி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். நடிகை தேவி திரையுலகிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் ஆண்டுதோறும் ஏழுமலையானை தரிசனம் செய்வார். அதேபோல், தன் தாயை போல் நானும் ஏழுமலையானை மிகவும் விரும்புகிறேன். அவர் சன்னதியில் தான்  திருமணம் செய்து கொள்வேன் என ஜான்விகபூர் ஏற்கனவே பல பேட்டிகளில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: