×

ஜப்பானில் நிலவி வரும் கடும் பனிமூட்டம்!: ஒரேநாளில் 100 விமானங்கள் ரத்து...பயணிகள் தவிப்பு..!!

டோக்கியோ: ஜப்பானில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள், குடியிருப்புகளில் வெள்ளை போர்வை போர்த்தியது போல் பனி படர்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். நகரின் முக்கிய சாலைகளில் 3 அடி உயரத்துக்கு பனி நிரம்பி காணப்படுவதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடும் பனிமூட்டம் நிலவியதால் வடக்கு மற்றும் மேற்கு பகுதி நகரங்களுக்கு செல்லும் 100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் இரண்டு பெரிய விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

ஹிரோகி - ஹயாகவா விமான நிலையத்தில் இருந்து செல்லும் 79 விமான சேவைகள் ரத்தானதால் 5100 பயணிகள் பாதிக்கப்பட்டதாக விமான நிலைய கட்டுப்பாட்டு இயக்குநர் தெரிவித்துள்ளார். 49 விமான சேவைகளை ஜப்பான் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் ரத்து செய்துவிட்டதால் 2460 பயணிகள் அவதியடைந்ததாக அந்த விமான நிறுவன பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார். சாலையில் மலை போல் பனி குவிந்துள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பணிக்குவியல்களை அகற்றும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனியையே நிகாட்டா மாகாணம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று சுமார் 90 செ.மீ. பனி பொழிவு இருக்கும் என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஜப்பான் கடலோர பகுதிகளில் அத்யாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது. ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த ஜப்பான் தமது எல்லைகளில் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Japan , Japan, fog, planes
× RELATED ஜப்பான், இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!!