×

ஓமிக்ரான் பரவல் எதிரொலியாக 5 மாநில தேர்தல் தள்ளி போகுமா ?: ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளருடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை!!

டெல்லி : ஓமிக்ரான் பரவலுக்கு இடையே விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட வேண்டிய மாநிலங்களின் நிலைமை குறித்து தேர்தல் ஆணையமும் ஒன்றிய அரசும் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. உத்தரப் பிரதேசம் , மணிப்பூர், உத்தராகண்ட், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களுக்கு அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவிக்கும் முடிவில் தேர்தல் ஆணையம் உள்ளது. ஆனால் நாட்டில் ஓமிக்ரான் வகை கொரோனா வேகமாக பரவி வரக்கூடிய சூழலில் தேர்தலை திட்டமிட்டபடி நடத்த முடியுமா எனவும் கேள்வி எழுந்துள்ளது.

தேர்தல் பொதுக்கூட்டங்கள், பேரணிகளை ரத்து செய்யுமாறு அண்மையில் அறிவுறுத்திய அலகாபாத் நீதிமன்றம் தேர்தல்களை ஓரிரு மாதங்கள் ஒத்திவைக்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பி உள்ளது. இந்த நிலையில் தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் கொரோனா நிலவரம்,தடுப்பூசி செலுத்தப்பட்ட விவகாரங்களை ஒன்றிய சுகாதாரத்துறை ஆய்வு செய்து வருகிறது. இது தொடர்பாக இன்று நடைபெற உள்ள ஆலோசனையில் ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷனுடன், தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.


Tags : Omicron ,Secretary of the ,Union ,Health Department , ஓமிக்ரான்
× RELATED கோவையில் பாஜகவுக்காக தேர்தல்...