×

பூந்தமல்லி அருகே டேங்கர் லாரி ஏறியதில் 10ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!!

சென்னை : பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை மேம்பாலம் சர்வீஸ் சாலையில் டேங்கர் லாரி ஏறியதில் 10ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தான். கோடம்பாக்கத்தை சேர்ந்த மாணவன் வினய் (15) தனது அக்கா வர்ஷாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எதிரே வந்த வாகனத்தில் மோதாமல் இருக்க பிரேக் பிடித்த போது, நிலைதடுமாறி கீழே விழுந்ததில், டேங்கர் லாரி மோதி வினய் உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் மதனகோபால் என்பவரை பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Bonthamalli , பூந்தமல்லி
× RELATED பூந்தமல்லிக்கு புதிய நகர செயலாளர் நியமனம்: டிடிவி.தினகரன் அறிவிப்பு