தமிழக செய்தித்துறை அமைச்சரிடம் திரைப்பட தயாரிப்பாளர்கள் கோரிக்கை

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், தமிழக செய்தித்துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.  இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழகத்தை கொரோனா பிடியிலிருந்து காப்பாற்ற இரவு, பகல் பார்க்காமல் உழைக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழ் திரையுலகை மீட்டெடுக்க தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் மனு அளித்திருந்தோம்.

அதன் தொடர்ச்சியாக நேற்று செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதனிடம், விபிஎப் கட்டணம் குறைப்பது தொடர்பான கோரிக்கை வைக்கப்பட்டது.  இதற்காக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தித்துறை இயக்குனர் வீ.ப.ஜெயசீலன், தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் என்.ராமசாமி என்கிற தேனாண்டாள் முரளி கலந்துகொண்டனர்’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: