×

பாஜவுக்கு மொழி திணிப்பில் உடன்பாடு கிடையாது இந்தி மொழியை திணித்தாலும் எதிர்ப்போம்: அண்ணாமலை பேட்டி

சென்னை: பாஜவுக்கு எந்த மொழி திணிப்பிலும் உடன்பாடு கிடையாது. இந்தி மொழியை திணித்தால் அதனையும் எதிர்ப்போம் என்று பாஜ தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் 4வது ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்‘ என்ற நிகழ்ச்சி மூலம் தொலைக்காட்சி, ரேடியோ வாயிலாக மக்களிடம் பேசி வருகிறார். இந்த ஆண்டுக்கான கடைசி நிகழ்ச்சி நேற்று நடந்தது. சென்னை அடையாறு காந்திநகரில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்னை மண்டல உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளள் கராத்தே தியாகராஜன் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பாஜ தலைவர் அண்ணாமலை, துணைத்தலைவர் வி.பி.துரைசாமி, பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் உள்ளிட்ட பாஜ நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அண்ணாமலை அளித்த பேட்டியில்,‘‘ பாஜகவுக்கு எந்த மொழி திணிப்பிலும் உடன்பாடு கிடையாது. இந்தி மொழி திணித்தாலும் அதனையும் எதிர்ப்போம். இந்தி மொழியை திணிப்பையே காங்கிரஸ் தான் கொண்டுவந்தது. மாநிலத்தில் ஒரு பேச்சும், டெல்லியில் ஒரு பேச்சுமாக இருக்கிறது. நீட் தேர்வு மூலம் மலைவாழ் மக்கள், பிற்படுத்தப்பட்டோர், கிராமத்தினர் உள்ளிட்ட அனைத்து ஏழைகளும் அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளனர் என்றார்.


Tags : BJP ,Annamalai , BJP, language dump, Hindi language, Annamalai
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...