×

நல்லக்கண்ணுவுக்கு டிடிவி.தினகரன் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: நல்லக்கண்ணு 80 ஆண்டுகால பொதுவாழ்க்கைக்குச் சொந்தகாரர் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: 80 ஆண்டுகால பொதுவாழ்க்கைக்குச் சொந்தகாரரும், விடுதலைப் போராட்டம், ஏழை, எளிய மக்களுக்கான உரிமைப் போராட்டம், தமிழ்நாட்டின் வளங்களைக் காப்பதற்கான போராட்டம் என உழைத்துக் கொண்டே இருப்பவரும், சிறந்த பொதுவுடைமைவாதியுமான அன்புக்குரிய பெரியவர் நல்லக்கண்ணுவிற்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். சிறந்த உடல்நலத்தோடு இன்னும் பல ஆண்டு காலம் அவர் மக்கள் பணியாற்றிட இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : DTV.Dhinakaran ,Nallakannu , Nallakannu, DTV.Dhinakaran, Happy Birthday
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்