×

நல்லக்கண்ணுவின் நூற்றாண்டு விழாவை காண காத்திருக்கிறோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவின் நூற்றாண்டு விழாவை காண நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவின் 97வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று சென்னை, தியாகராயநகரில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு நேரில் சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். உடன் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இருந்தார்.

அப்போது முதல்வர் பேசியதாவது: மக்களுக்கும், பாட்டாளி வர்க்கத்திற்கும் தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்க கூடியவர் நல்லக்கண்ணு. ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்தநாளன்று நாங்கள் வாழ்த்து தெரிவித்துக்கொள்வதோடு, அவரது வாழ்த்துகளையும் பெற்றுக் கொள்கிறோம். அதேபோல் இந்த ஆண்டும் நானும், பொதுச்செயலாளர் துரைமுருகனும் திமுக தோழர்கள் சார்பில் நெஞ்சார வாழ்த்த வந்திருக்கிறோம். நல்லக்கண்ணுவின் நூற்றாண்டு விழாவிற்கு நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். அவரை வாழ்த்துவதில் நாங்கள் பெருமை அடைகிறோம். மக்களுக்கான பணியை செய்ய நல்லக்கண்ணு பல்லாண்டுகாலம் வாழ வேண்டும். இவ்வாறு முதல்வர் வாழ்த்தினார்.

Tags : Nallakannu ,Chief Minister ,MK Stalin , Nallakannu, Centenary Celebration, Chief Minister MK Stalin, Happy Birthday
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்...