×

கிரயம், அடமானம், உரிமை ஆவணங்களில் பிரச்னை இருந்தாலும் உரியவர்களிடம் தடையின்மை சான்று பெற்று பதிவு செய்யலாம்: பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் அதிரடி நடவடிக்கை

சென்னை: பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் அனைத்து சார்பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆவணப்பதிவின்போது வில்லங்கச் சான்றின்படி உடன்படிக்கை, அடமானம், உரிமை ஆவணங்கள் ஒப்படைப்பு மற்றும் குத்தகை குறித்த வில்லங்க பதிவு நிலுவையில் இருப்பின் அதற்காக தொடர் ஆவணப் பதிவினை நிறுத்திவிடாமல் கீழ்க்கண்ட நடைமுறைகளை பின்பற்றி ஆவணப்பதிவு மேற்கொள்ள பதிவு அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

* வில்லங்கச் சான்றின்படி நிலுவையில் உள்ள கிரய உடன்படிக்கை ஆவணங்களை பொறுத்து, அக்கிரய உடன்படிக்கை ஆவணங்களில் உள்ள காலக்கெடு முடிந்துவிட்டது குறித்தும், காலக்கெடு முடிவடைந்த நிலையில் எந்த ஒரு நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் இல்லை அல்லது வழக்கு தொடுப்பதற்கான காலக்கெடுவான மூன்று ஆண்டுகள் முடிந்துவிட்டது என்பது குறித்தும் ஆவணதாரர்களால் தற்போது பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் ஆவணத்திலேயே தெரிவிக்க வேண்டும்.
அதே போன்று, ஆவணச் சொத்து தொடர்பாக உடன்படிக்கையில் கிரயம் பெறுபவராக கையொப்பமிட்ட நபரால் நீதிமன்றத்தில் உடன்படிக்கையை அமல் செய்யக் கோரி வழக்கு தொடர்ந்திருப்பதாக உரிய ஆதாரங்களுடன் தடை மனு தாக்கல் செய்யாததையும் உறுதி செய்து கொண்டு தொடர் ஆவணப்பதிவுகளை அனுமதிக்கலாம்.

* வில்லங்கச் சான்றில் அடமானம் மற்றும் உரிமை ஒப்படைப்பு ஆவணம் வில்லங்கம் நிலுவையில் இருப்பின் சம்பந்தப்பட்ட வங்கியிடமிருந்து தடையின்மை சான்று பெற்று பதிவுக்கு ஆவணம் தாக்கல் செய்யப்படும்போது அறிவுறுத்தப்படுகிறது.
* வில்லங்கச் சான்றின்படி ஒரு சொத்து குறித்து குத்தகை ஆவணம் குறித்த பதிவு இருப்பின் அச்சொத்து குறித்து சொத்தின் உரிமையாளரால் கிரயம் உள்ளிட்ட இதர தொடர் ஆவணங்கள் பதிவுக்கு தாக்கல் செய்யப்படின், முன் பதிவான குத்தகை ஆவணத்திற்கு குத்தகை காலம் முடிவுற்றிருப்பின் தொடர் ஆவணத்தினை பதிவுக்கு ஏற்கலாம்.

குத்தகை காலம் முடிவுறாத நிலையில் பொது அதிகார ஆவணம் தாக்கல் செய்யப்படின் அந்த ஆவண வாசகத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட குத்தகை ஆவணம் முடிவுறாமல் நடப்பில் உள்ளது எனத் தெரிவித்தும் தொடர் ஆவணங்கள் குத்தகை பெற்றவரிடம் தடையின்மை சான்று பெற்றே பதிவு செய்ய வேண்டும் என்ற வாசகங்களுடன் தாக்கல் செய்யப்பட்டால் பொது அதிகார ஆவணத்தை பதிவுக்கு ஏற்கலாம். மற்ற ஆவணங்களை பொறுத்து குத்தகை காலம் முடிவுறாத நிலையில் குத்தகை பெற்றவரிடம் தடையின்மை சான்று பெற்று தாக்கல் செய்யப்படின் பதிவுக்கு ஏற்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.


Tags : Sivan Arul Action , Purchase, Mortgage, Problem, Registrar IG Sivan Arul, Action
× RELATED சொந்த மாவட்டத்தில் சார்பதிவாளர்கள்...