×

ஆட்டோ முதல் நவீன கார்கள் வரை எல்லா வாகனங்களும் எத்தனாலில் இயங்கும்: விரைவில் நடக்கும் என்கிறார் கட்கரி

புதுடெல்லி:  நாட்டில் அனைத்து வாகனங்ளையும் எத்தனாலில் இயங்குவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளதாக ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் நடந்த நிகழ்ச்சியில் கட்கரி கலந்து கொண்டு பேசியதாவது: நாட்டில் விரைவில் அனைத்து வாகனங்களும் எத்தனாலில் இயங்கும். எதிர்காலத்தில் நாட்டில் அதிக அளவில் எத்தனால் பங்க்குகள் செயல்படும். எத்தனாலை பயன்படுத்துவதால் வாகன எரிபொருளுக்கான செலவு குறைவதோடு, காற்று மாசும் குறையும். ஆட்டோ ரிக்‌ஷா முதல் அதிநவீன கார் வரை அனைத்து வாகனங்களும் விரைவில் எத்தனால் எரிபொருள் மூலமாக இயங்கும். விவசாயிகள் வழக்கமான பயிர்களை விட, லாபத்தை பெறுவதற்கு எத்தனால் உற்பத்திக்கு திரும்ப வேண்டும். வாகனங்களில் பெட்ரோல் - எத்தனால் கலந்த எரிபொருள் அல்லது எத்தனாலை மட்டுமே பயன்படுத்துவதற்கு ஏற்றவகையில், இரட்டை பயன்பாட்டு இன்ஜின்கள் கொண்ட வாகனங்களை 6 மாதங்களில் தயாரிக்கும்படி, வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் ரூ.8 லட்சம் கோடியை அரசு செலவழிக்கிறது. இரட்டை எரிபொருள் இன்ஜினை அதிகமாக பயன்படுத்த தொடங்கினால், இந்த செலவு கணிசமாக குறையும்.  இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Gadkari , All vehicles from autos to modern cars run on ethanol: it will happen soon, says Gadkari
× RELATED நாக்பூர் தொகுதியில் போட்டியிடும்...