×

தனிப்பிரிவு காவலர்கள் 15 பேர் பணியிட மாற்றம்: எஸ்பி சுதாகர் உத்தரவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டங்களின் கீழ் மொத்தம் 14 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த காவல் நிலையங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் நிலவும் பிரச்னைகள் மற்றும் தொழிற்சாலை பிரச்னைகளை முறையாக கையாள வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில் நிலவும் பிரச்னைகள், கட்சிகளின் நடவடிக்கை, சட்டம்-ஒழுங்கு போன்றவற்றை கண்காணிக்க சிறப்பு தனிப்பிரிவு உளவுத்துறை காவலர்கள் நியமிக்கப்பட்டு, பிரச்னைகளை முன்கூட்டியே மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தெரிவிப்பது வழக்கம். தனிப்பிரிவு உளவுத்துறை காவலர்கள் பணிகளை முறையாக செய்யவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் நிர்வாக காரணங்களை கருத்தில்கொண்டு 6 தனிப்பிரிவு உளவுத்துறை காவலர்கள் காவல் நிலையங்களுக்கும், 9 காவலர்கள் சிறப்பு தனிப்பிரிவுக்கும் மாற்றம் செய்து எஸ்பி சுதாகர் உத்திரவிட்டுள்ளார். உடனடியாக பணியில் சேரும்படியும் அறிவுறுத்தியுள்ளார். காஞ்சிபுரம் தாலுகா காவல்நிலைய எல்லையில் அதிக கிராமங்கள்‌ இருப்பதால், கூடுதலாக சிறப்பு தனிப்பிரிவு உளவுத்துறை காவலர் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Sudhakar , Transfer of 15 Private Guards: SP Sudhakar Order
× RELATED மேய்ச்சலுக்கு சென்றபோது கத்தியால் வெட்டியதில் குடல் சரிந்து பசு மாடு பலி