பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் பொன்.புருஷோத்தமன் படத்திறப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் ஒன்றியம் செவ்வாப்பேட்டை ஊராட்சி சிறுகடல் கிராமத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவரும், நாக்பூர் தீக்ஷாபூமி புனித பயண குழுவின் ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் பொன்.புருஷோத்தமனின் 16ம் நினைவு நாளை முன்னிட்டு படத்திறப்பு விழா நடைபெற்றது. இதில் வழக்கறிஞர் எம்.கருணாகரன், பி.கலைவாணி புருஷோத்தமன், பி.சாதன, ஒன்றிய கவுன்சிலர் கே.ஆர்.வேதவள்ளி சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பி.அருளானந்தம், ஆர்.பன்னீர்செல்வம், டாக்டர்கள் பி.பிரகலாதன், சி.ஆர்.ஹோம் பிரீதா ஆகியோர் வரவேற்றனர். இந்த விழாவில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரும், தென்னிந்திய புத்த விகாரின் நிறுவனருமான தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் கலந்துகொண்டு உருவப்படத்தை திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினார்.

மேலும் பௌத்த அறவணடிகள் புத்த பிரகாஷ், புத்த தம்ம வந்தனம் கூறினார். பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் டாக்டர் என்.இளங்கோவன், ஊராட்சி தலைவர் டெய்சிராணி அன்பு, திமுக கிளைச் செயலாளர் எஸ்.சரவணமூர்த்தி, டாக்டர் மு.மணி, கு.பாண்டியன், கு.புவியரசு, வழக்கறிஞர் எம்.ஜெயசீலன், ஆசிரியர்கள் ச.அருணன், கிருபாகரன், புல்லரம்பாக்கம் மாரிமுத்து, ஐசிஎப் ரவி, அபினாஷ், எட்வின், பகுஜன் சமாஜ் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் அம்பேத் ஆனந்த், மாவட்ட தலைவர் பகுஜன்பிரேம், மாவட்ட நிர்வாகிகள் ஜெய்பீம் செல்வம், வீரா விஜி, வெற்றிவேந்தன், கபிலன், தொகுதி தலைவர்கள் திருவூர் டில்லி, சேலைசுரேஷ், புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட நிர்வாகி தா.கோபிசந்திரன் பாலாஜி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: