2022ல் இவையெல்லாம் நடக்கும்: பீதியை கிளப்பும் பாபா வங்கா கணிப்புக்கள்

சோபியா: பல்கேரியாவை சேர்ந்த மூதாட்டி பாபா வங்கா. எதிர்காலத்தில் நடப்பதை முன்கூட்டியே கணித்து கூறியவர். இவர் 12 வயதாக இருக்கும்போது சூறாவளியில் சிக்கி கண்பார்வையை இழந்தார். கண் பார்வையை இழந்த பிறகு, கடவுள் தனக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தியை கொடுத்துள்ளதாக கூறிவந்தார். கடந்த 1996ம் ஆண்டு 84 வயதில் பாபா வங்கா உயிரிழந்தார். எனினும், இவர் ஒவ்வொரு ஆண்டும் இந்த உலகத்தில் நடக்கக்கூடிய முக்கிய, பயங்கர நிகழ்வுகள் குறித்து அவர் கணித்து வைத்து சென்றுள்ளார். 5079ம் ஆண்டு  இந்த உலகம் முடிவுக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாபா வங்காவின் பல்வேறு கணிப்புக்கள் ஏற்கனவே உண்மையாகியுள்ளன. அவர் முன்கூட்டியே கணித்திருந்த சோவியத் யூனியன் சீர்குலைவு, இளவரசி டயானா மரணம், 2004ல் தாய்லாந்தை சுனாமி தாக்கியது, அமெரிக்காவின் அதிபராக பராக் ஒபாமா பதவியேற்றது உள்ளிட்ட நிகழ்வுகள் உண்மையாகி உள்ளன. மேலும், 9/11 தீவிரவாத தாக்குதல் மற்றும் ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து விலகியதற்கான பிரெக்சிட் ஒப்பந்தம் குறித்தும் பாபா வங்கா முன்கூட்டியே கூறியுள்ளார். இதேபோல், 2022ம் ஆண்டில் நடக்கக் கூடிய பல்வேறு சம்பவங்களையும் பாபா வங்கா குறிப்பிட்டு சென்றுள்ளார்.

அவற்றில் முக்கியமான சிலவற்றின் விவரம் வருமாறு:

* விவசாய நிலங்களில் வெட்டுக்கிளிகள் தாக்கி அழிக்கும். இதன் காரணமாக பஞ்சம் தலைவிரித்தாடும்.

* உலகின் மிகப் பெரிய நகரங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்.

* நதிகள் மாசுபாடு காரணமாக தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு போர் உருவாகும்.

* ஆசிய நாடுகளும், ஆஸ்திரேலியாவும் கடுமையான வெள்ளப்பெருக்கினால் பாதிக்கக்கூடும்.

* ஏராளமான பூகம்ப சம்பவங்களும், சுனாமி ஆபத்தும் அதிகரிக்கும்.

* சுனாமியின் காரணமாக பல ஆயிரம் மக்கள் பலியாகக்கூடும்.

* ஸ்வீடன் நாட்டில் இதுவரை உறைந்த நிலையில் இருந்த ஒரு கொடிய வைரசை ஆராய்ச்சியாளர்கள் குழு  கண்டுபிடிக்கும். - இவ்வாறு பல கணிப்புகளை அவர் கூறியுள்ளார். புவி வெப்பமடைதல், அதன் காரணமாக பனிப்பாறைகள் உருகுதல் போன்றவற்றால் பாபாவின் கொடிய வைரஸ் கூற்று உண்மையாகும் சாத்தியங்கள் இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

* வேற்று கிரகவாசிகள் பூமிக்கு வருவார்கள்

2022ம் ஆண்டு அதிகளவில் கணினி பயன்பாடுகளை சார்ந்ததாக இருக்கும் என்றும் உலக மக்கள் முன்பை காட்டிலும் அதிக நேரத்தை திரைகளின் முன் செலவிடுவார்கள் என்றும் தனது 2022ம் ஆண்டுக்கான கணிப்பில் பாபா வங்கா கூறியுள்ளார். மேலும், ‘ஏலியன்’கள் எனப்படும் வேற்று கிரகவாசிகள் பூமியில் வாழ்வதற்கான வழிகளை தேடி, ‘ஒமுஅமுவா’ (oumuaumu) என்ற சிறிய கோளை அனுப்புவார்கள் என்றும் பாபா வங்கா தெரிவித்துள்ளார்.

Related Stories: