×

மார்கழி மாதத்தை முன்னிட்டு திருவில்லிபுத்தூரில் வண்ண கோலப்பொடி விற்பனை ஜரூர்

திருவில்லிபுத்தூர்: மார்கழி மாதத்தை முன்னிட்டு, திருவில்லிபுத்தூர் பகுதியில் வண்ண கோலப்பொடி தயாரித்து, விற்பது தீவிரமடைந்துள்ளது. மார்கழி மாதத்தில் அதிகாலையில் வீட்டு வாசல்களில் வண்ண கோலமிடுவது தமிழகத்தில் பிரசித்தம். இதையொட்டி வண்ண கோலப்பொடி தயாரிப்பு தொழிலில் ஏராளமானோர் இறங்கியுள்ளனர். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் பகுதியில் குடிசைத்தொழில் தயாரிப்பாக அதிகளவில் வண்ண கோலப்பொடி தயாரிப்பு நடக்கிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இங்கிருந்து வண்ண கோலப்பொடி அனுப்பி வைக்கப்படுகிறது.

திருவில்லிபுத்தூர் பேட்டைத்தெரு பகுதியை சேர்ந்த சேகர், காண்போரை கவரும் வகையில் சிவப்பு, ஊதா, மஞ்சள், பச்சை, ஆரஞ்சு, நீலம், கிளிப்பச்சை உள்பட 30க்கும் மேற்பட்ட வண்ணங்களில் கோலப்பொடி தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இது குறித்து சேகர் கூறுகையில், ‘‘பல ஆண்டுகளாக இத்தொழிலில் ஈடுபட்டுள்ளேன். ஐந்து ரூபாயிலிருந்து ஐம்பது ரூபாய் வரை பாக்கெட்களில் அடைக்கப்பட்ட வண்ண கோலப்போட்டிகள் விற்பனைக்கு. பொதுமக்கள் தேவைக்கேற்ப விரும்பி கேட்கும் வண்ணத்திலும் கோலப்பொடி தயாரித்து கொடுக்கப்படுகிறது’’ என்று தெரிவித்தார்.

Tags : Srivilliputhur , Color powder powder sale in Srivilliputhur ahead of the month of March
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன்...