×

கிறிஸ்துமஸ், அரையாண்டு விடுமுறையால் குமரி சுற்றுலா தலங்களை அலங்கரிக்கும் மக்கள் வெள்ளம்

குலசேகரம்: குமரியில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று திற்பரப்பு அருவி. கொரோனா 2வது அலை காரணமாக கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில், கடந்த வாரம் தான் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். அன்று முதல் தினசரி கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது  மழை இல்லாததால் திற்பரப்பு அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டுகிறது. இதனால் அருவியில் எல்லா பகுதிகளிலும் குளிக்க வசதியாக உள்ளது. இந்தநிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் அரையாண்டு தொடர் விடுமுறை காரணமாக  திற்பரப்பு களைகட்டியுள்ளது. ேநற்று கிறிஸ்துமஸ் தினத்தில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

இன்றும் கூட்டம் மிகுதியாக காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் ஜில்லென கொட்டிய அருவில் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தனர். இதேபோன்று திற்பரப்பு தடுப்பு அணையில் நடைபெறும் உல்லாச படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். கூட்டம் அதிகரிப்பால் வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் கடும் நெருக்கடி ஏற்பட்டது. சாலையோரம் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சுற்றுலா பயணிகள் அதிகரிப்பால் சிறுசிறு கடைகள் முளைத்துள்ளன. வெயில் காலத்திற்கு  ஏற்ற வயைில் இளநீர், நொங்கு விற்கும் கடைகள் அதிகமாக காணப்பட்டன.

இதேபோன்று பரளியாற்றின் குறுக்கே மாத்தூர் பகுதியில் ஆசியாவிலேயே உயரமானதும் நீளமானதுமான மாத்தூர் தொட்டி பாலமும் சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. சுற்றுலாவினர் பாலத்தின் பிரமாண்டத்தையும், பாலத்தின் நடுவில் நின்று பாறைகள் இடையே தவழ்ந்து செல்லும் பரளியாற்றின் இயற்கை அழகையும் செல்போனஜில் படம்பிடித்து மகிழ்ந்தனர். கூட்டம் மிகுதால் வாகனங்கள் நிறுத்தும் பகுதி நிரம்பியது. இதனால் ேநற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதற்கிடையே விற்பனைக்கு வைத்திருந்த மலைத்தேன் அன்னாசி பழம், மலையில் உற்பத்தி பொருட்களை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடம் வாங்கி சென்றனர். இதுபோல் அருவிக்கரை பகுதியில் பாறைககளுக்கு இடையே பாய்ந்து செல்லும் பரளியாற்றின் அழகை ரசித்தபடி அருவியில் நீராடி மகிழ்ந்தனர். இதனை போன்று பேச்சிப்பாறை , பெருஞ்சாணி அணைகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியிலும் இன்று வெளிநாட்டு, வெளிமாநில சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பகதர்கள் அதிகமாக குவிந்தனர்.

அதி காலையில் சூரிய உதயத்தை கண்டு ரசித்துவிட்ட கடலில் புனித நீராடி மகிழ்ந்தனர். பின்னர் பூம்புகார் படகில் சவாரி செய்து திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறையை கண்டு ரசித்தனர். இதனால் கன்னியாகுமரி எங்கும் சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் தலைகளாக தென்பட்டன. கடைகளில் வியாபாரமும் களை கட்டியது.

Tags : Kumari ,Christmas , People flood Kumari tourist spots with Christmas and mid-term holidays
× RELATED சித்திரை மாத பிறப்பையொட்டி குமரி...