பீகார் மாநிலத்தில் நூடுல்ஸ் தயாரிப்பு ஆலையில் தீ விபத்து; 6 தொழிலாளர்கள் உயிரிழப்பு..! 12-க்கும் மேற்பட்டோர் காயம்

பாட்னா: பீகார் மாநிலத்தில் நூடுல்ஸ் தயாரிப்பு ஆலையில் கொதிகலன் வெடித்து 6 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். முஸாபர்பூரில் நடந்த விபத்தில் காயமடைந்த மேலும் 6 தொழிலாளர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் நூடுல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் 100-க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த தொழிற்சாலையில், இன்று காலை 10 மணியளவில் அங்கு உள்ள கொதிகலன் ஒன்றில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்த கூடுதல் விவரங்கள் வெளியாகவில்லை. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் பலி எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாய்லர் வெடி விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விபத்தில் உயிரிந்தவர்களின் அடையாளங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை.

Related Stories: