இன்றும், நாளையும் வறண்ட வானிலை தமிழகத்தில் கூடுதலாக 59% மழை பெய்தது: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்றும், நாளையும் வறண்ட வானிலை காணப்படும். அதே நேரத்தில் கடந்த 3 மாதத்தில் தமிழகத்தில் கூடுதலாக 59 சதவீதம் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி கீதா கூறியதாவது: தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் வறண்ட வானிலையே நிலவும். இன்று உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் தெளிவாகவும், புறநகர் பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகப்பட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தப்பட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவியது.இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 1ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 441.8 மில்லி மீட்டர் மழை பெய்யும். ஆனால், இந்த காலக்கட்டத்தில் இயல்பை விட 59 சதவீதம் மழை அதிகமாக பெய்துள்ளது. அதாவது, 704.3 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அதிகப்பட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 120 மில்லி மீட்டர் மழை கூடுதலாக பெய்துள்ளது. இங்கு வழக்கமாக 544.9 மில்லி மீட்டர் மழை பதிவாகும். ஆனால், இந்த காலக்கட்டத்தில் 1197.6 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. திருப்பத்தூரில் 114 சதவீதமும், கன்னியாகுமரியில் 108 சதவீதம் மழையும், கோவையில் 100 சதவீதம் மழையும், நாமக்கல்லில் 83 சதவீதமும், பெரம்பலூரில் 82 சதவீதமும், திருவண்ணமலையில் 81 சதவீதம் மழையும் கூடுதலாக பெய்துள்ளது. குறைந்த பட்சமாக ராமநாதபுரத்தில் 15 சதவீதம் கூடுதல் மழை கிடைத்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: